எங்கடா இங்க இருந்த ஏடிஎம் ல காச காணோம் ! galattaatoday.blogspot.in
இந்தியா முழுவதும் ஏடிஎம்களில் பணதட்டுப்பாடு நிலவி வரும் இந்த மோசமான நிலையில் மக்களைத் தவிக்கவிட்டு பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார், இதுமட்டும் அல்லாமல் பணத் தட்டுப்பாடு குறித்து எவ்விதமான கருத்தும் அவர் அளிக்கவில்லை. 3 நாட்களில் பணத் தட்டுப்பாடுகள் தீர்க்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ள போதும், மக்கள் மத்தியில் பதற்றம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை சில மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்த பணத் தட்டுப்பாடு பிரச்சனைகள் தற்போது தமிழ்நாடு, கர்நாடகா என நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மோடியின் வருகையில் போது டிவிட்டரில் #Gobackmodi டிரென்டான வகையில் தற்போது பணத் தட்டுப்பாடு நிலை குறித்து நாடு முழுவதும் உள்ள மக்கள் #CashCrunch டேங்-இல் வலிமையான கருத்துகளை டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
"பொதுவாக மது கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவும், இப்போது பணமில்லாமல் தட்டுப்பாடு நிலவுகிறது."
"கேஷ்லெஸ் எகானமி என்பது வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் இல்லாமல் இருப்பது அல்ல." என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் பலர்.
Report Story