”பொங்கலோ பொங்கல்”

              ஏர்முனை வாழ்க்கை ஏற்றம்பெற
                                இருகரம் நீட்டி வரவேற்போம்!
                                உழவர்களை !
                                அவர்களும்நாமும் வாழவே!
          

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

                                கரும்பு இனிக்கும்…. ஆனால்
                                கரும்பு விவசாயிகள்
                                கூக்குரல்கள் எழாமலிருக்க
                                ஏற்றிவிடுவோம் அவர்தம் வாழ்வை
           மஞ்சள் மணக்கும்
           மங்கையரைக் கண்டால்
           மனம் பூரிக்கும். ஆனால்
           மஞ்சள் விவசாயம் செய்வோர்
           மனம் புழுங்காமல்
           மகசூல் செய்ய ஆதரிப்போம்!
           சுற்றுகின்றி சக்கரத்தில்
           லாகவமாய் மண்ணிட்டு
           வாகாய் வடிவமைக்கும்
           ”குயவர்கள்வாழ்வும்
           குதுகுலம் அடைய ஆதரிப்போம்!
           நூல்கொண்டு நெய்தேகால்
           நோகும் நெசவாளிகளை
           நினைத்தே ஆதரிப்போம்
           கைத்தறி வேட்டி..சட்டை
           வாங்கியே..
           இத்தனையும் செய்தால்
           இனிக்கத்தான் செய்யும்
           பொங்கலோ..பொங்கல்!
n  கவிஞர் கு. அசோகன்.
          
          
          
                               

     
Report Story