காவிரியே வந்துவிடு

                விரிகின்ற காவிரியே விழி திறக்க மாட்டாயா?
                                விவசாயிகள் துயரினை நீதுடைக்க மாட்டாயா?
காவிரியே வந்துவிடு
காவிரியே வந்துவிடு

                   குடகில் பிறந்தவளே! குளிராய் விரிந்தவளே!
         கன்னித்தமிழ் கரையோரம் நீஒதுங்க மாட்டாயா?
         அடகில் வைத்துவிட்டோம் மானம் போகுதம்மா!
         ஆடியிலே நீஆடியாடி வந்திடுவாய் என்றோமே!
      ஆண்டான்டாய் அழுகின்றோம் எம்குரல் கேட்கலையோ?
       அடிவயிறு நெருப்பாய் கன ன்றே எரியுதும்மா
      மீண்டுவருவாயோ ? மாளாத்துயர் தீர்த்திடவே!
      மேகம் கறுத்திட்டாலும் மழையேதும் போதலையே
      பிறந்தஇடம் குடகென்றாலும் புகுந்தவீடு தமிழ்தானே!
      சிறப்பாய் இருப்பாய் எனநேர்ந்து வழிபட்டோம்
       குறைகள் களைந்திடவே கனிவாய் வந்திடுவாய்
       கடல லைப் போல சீறியே வந்திடுவாயே!
Report Story