கருப்பும் சிவப்பும்

கருப்பும்சிவப்பும்
கரியநிற பொருட்களையே கண்டு விடின்
காத தூரம் ஓடிடுவான் கார்மேகம் தான்
கரும்மேக கூட்டத்தை காணா மலே
கூட்டுப் பறவையென முடங்கி டுவான்
கருமைநிறக் கண்ணனின் எழிலைக் கூட
கண்கொண்டு பார்க்கவே தயங்கி டுவான்
கரியநிற வேழத்தின் அருகில் கூட
கணநேரம் நிற்காமல் நகன்றிடு வானே!
இனிய கவிதை உலா
கருப்பும் சிவப்பும்
கரியநிற மென்றாலே ஏனோ கார்மேகம்
காத்தூரம் ஓடுகின்றாய் என்றே வினவி
கரியநிற குயில்தான் அழகாய் கூவும்!
காதோரம் அதனினிமை நன்றாய் கேட்கும்
கரியநிற காக்கையே பகிர்ந்(து) உண்ணும்
கருத்தாக சொன்னால் காதிலே விழாது
கரியநிற பெண்ணொருத்தி கண்ட ஓர்நாள்
கருப்பியென கேலிசெய்து ஒதுக்க லானான்
 கரியநிற மேகம்சூழ் மாலைப் போழ்தில்
 கானகத்து மலைப் பாதை தன்னில்
 சரிவான பாதையிலே சறுக்கும் போது
 சட்டென கரம்தந்தவள் கரிய நிறத்தாளே!
 அரிதான அந்திமஞ்சள் பொழுது தன்னில்
 அகண்டதொரு பள்ளத்திலே விழுந்துவிட
 சிரித்தே சிவந்தவள் கேலி செய்தாளே!
 நிறம்கருப்பின் நேர்மை தெரிந்த வானான்!

Report Story