எழில் தமிழழகைப் பாடிமகிழ வேண்டும் – தமிழ் புத்தாண்டு கவிதை

சீறிவரும் கடல லையில் கால் நனைத்தே
                சித்திரையில் முழுநிலவு கண்டு மகிழ்வோம்
                தூறிடும் சாரல்தேடி  சென்றே தான்
                தூய்த்திடவே துடித்திடுவோம் இன்ப மதை
                சாறினையே குடித்துதான் தாகம் போக்கி
                சத்தான பழங்களையே சாப்பிடு வோம்!
           கூறிடுவோம் கதிரவன் வெம்மை அதிகமே!
       கதிரவனின் வெம்மையை தணித் திடவே
       காணுமிட மெங்கிலும் மரம்வளர்ப் போமே!
       புதிதாக பிறந்துள்ள புத்தாண்டு தன்னில்
       பொலிவோடு புத்தாடை அணிந்தே தான்
       எதிர்வரும் நாட்களிலே இனிமை நிழல்
       என்றுமே நிலைத்திட செடியும் நடுவோம்
       குதிரையாய் ஓடியோடி உழைத்த நாளில்
       கொண்டிடுவோம் கோடையிலே ஓய்வு தானே!
       மண்மணக்க பயிர்கள் வளர்தல் வேண்டும்
       மலர்வகைகள் பூத்தே குலுங்க வேண்டும்
       உண்ணும்  பொருள் தந்துதவும் உழவர்
       உயர்ந்திடவே கரங்களை தந்திடு வோம்
       எண்ணும் சிந்தையிலே எல்லா மாய்
       எழில்தமிழ ழகைப் பாடிமகிழ வேண்டும்!
       பண்ணோடு பாவாக இணைதல் போல
       பண்பாடி நாளும்தான் மகிழ்ந்தி டுவோமே!

தமிழ் புத்தாண்டு கவிதை யூடியுபிலும் காணலாம்

Report Story